×

தொடரும் வெள்ளப்பெருக்கு; குற்றாலம் அருவிகளில் 2வது நாளாக குளிக்க தடை.! ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம்

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் 2வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக 2வது நாளாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலத்தில் சீசன் காலம் முடிந்தும் அவ்வப்போது அருவிகளில் தண்ணீர் விழுந்து வருகிறது. தற்போது, சபரிமலை சீசன் என்பதால் தினமும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் அருவிகளில் குளித்து செல்கிறார்கள். அதுபோல் சுற்றுலா பயணிகளுக்கும் குளித்து செல்கின்றனர். இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று காலையில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்ததால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அங்கு ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் 2வது நாளாக இன்றும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Kurdalam , Continued flooding; Banning of bathing in Kurdalam waterfalls for the 2nd day. Ayyappa devotees are disappointed
× RELATED குற்றாலம் அருவிகள் வறண்டு காட்சி அளித்த நிலையில் தற்போது இடியுடன் மழை!